திங்கள், 2 பிப்ரவரி, 2015

மகள் தன் தாய்க்கு எழுதிய கடிதம்.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம்..
அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாகா ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .
பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.
வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது
எத்தனை பொறுப்புகள்
எத்தனை சுமைகள்
எத்தனை எதிர் பார்ப்புகள் ?
எத்தனை தியாகங்கள்
எத்தனை ஏமாற்றங்கள்
நினைத்த நேரத்தில் ,நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..
குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..
உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான் உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..
இங்கே அவர்கள் விருபிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்..

இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்ற்து போல் சொல்லி செல்ல இயலவில்லை.
என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு..
நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை.
எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..

சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..
இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது..என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது
உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே!
உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது

உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது
வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது..

ஆனால் அடுத்த கனமே
நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய்
நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..
நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா..
நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாறா அன்பையும் நான் திருப்பி தர வேண்டாமா..என்று நினைத்து கொள்கிறேன் ..
அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..
அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது..

தெளிவாக புரிகிறது காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்..
நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..
உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும்
ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..
நன்றிம்மா .

என்றும் அன்புடன்...!!
பெண் அன்பில் ஒரு தாய்
பெண் அழகில் ஒரு தேவதை
பெண் அறிவில் ஒரு மந்திரி
பெண் அதரவுயில் ஒரு உறவு
பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு
பெண் வெற்றிக்கு ஒரு மாலை
பெண் தோல்விக்கு ஒரு பள்ளம்
பெண் நட்பில் ஒரு நேர்மை
பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியார்
இருந்தாலும் பெண் ஒரு புரியாத புதிர்...

வெள்ளி, 14 நவம்பர், 2014

நடத்துநர், ஓட்டுநர் நள்ளிரவில் திடீர் போராட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்.அப்போதுதான் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு மற்றும் உண்மைநிலை அறிய முடியும்...நாட்டின் பாதுக்காப்பிற்கே கண்காணிப்பு கேமரா பயன்படும்போது பேருந்து பயணத்திற்கு பாதுகாப்பு கொடுக்காதா?????????


First Published : 15 November 2014 04:57 AM IST


                  சென்னையில் 15-11-2014 வெள்ளிக்கிழமை இரவு மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுவழியில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகியினர்.
                     பாரிமுனையிலிருந்து கோயம்பேடு சென்ற மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம், ஒரு பயணி தகாத முறையில் நடந்து கொண்டாராம். அந்தப் பயணியைப் பிடிக்க பேருந்தை நிறுத்துமாறு அந்தப் பெண் கோரியுள்ளார்.
             ஆனால், பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் பேருந்தை நிறுத்த மறுத்துவிட்டனர். இதனால், அந்தப் பெண் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் பிடித்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படுகிறது.
நடத்துநர், ஓட்டுநரைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இரவு திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
மாநகரப் போக்குவரத்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை நடுவழியில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு போராட்டம் செய்ததால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சாலையில் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன ஓட்டிகளும் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
அந்தப் பெண்ணின் உறவினருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நள்ளிரவு வரை உடன்பாடு ஏற்படாததால் நள்ளிரவுக்குப் பின்னரும் போராட்டம் நீடித்தது.
                பயணிகளுக்கு ஏற்படும் வேதனையான இந்த நிகழ்வு மாநகரப்போக்குவரத்தில் மட்டும் நடப்பதில்லைங்க!..நீண்ட தூர வழித்தடங்களில் இயக்கப்படும்,இரவுநேர இயக்கப் பேருந்துகளில் தினந்தோறும் நடந்துகொண்டுதாங்க இருக்கிறது.இதை வெளியில் சொன்னால் மானக்கேடு? என்று நினைப்பவர்களும்,தக்க முறையீடு செய்ய முடியாமல்? வேதனைப்படும் அப்பாவிகளும் மிகுந்த மனவேதனைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..அப்படியே மற்றவர்களுக்காவது பாதுகாப்பு கிடைக்கட்டும் என்று நம்ம தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பி இருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகத்தின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை விசாரிக்காமல் பயணியே முழுத்தவறும் செய்ததாக காரணம் காட்டி தவறு செய்யும் நடத்துநருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.தவறு செய்யும் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மேலும் தவறு செய்ய ஊக்கமளிக்கிறார்கள்!?!?!?!.........முதலில் இவ்வாறான பயணிகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாக கவனத்தில் கொண்டு நேர்மையான விசாரணை செய்யவேண்டும்.அதைவிட்டு தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக செய்ல்படும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது?இதற்கு தனியார்துறையே மேல்...இனியாவது விசாரணை நேர்மையாக இருக்க வேண்டும்.கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.உண்மைநிலை அறிந்து தக்க பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.இதில் தவறு என்று சொல்லும் அரசு போக்குவரத்து அதிகாரிகளாகட்டும்,அரசுத்துறை அதிகாரிகள் ஆகட்டும்.எனது அனுபவத்தை கேளுங்க.சென்னையிலிருந்து சத்தியமங்கலத்திற்கு (tripcode 2000CHESTMCC020) PNR#U7522670 ROUTE NUMBER 40709 முன்பதிவு செய்து 30-05-2014அன்று இரவில் தனிபயணியாக பயணித்த பயணி சார்பாக கொடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரை சம்பந்தப்பட்ட மனுதாரரையோ அல்லது பயணியையோ விசாரிக்காமல் தள்ளுபடி செய்த காரணம் என்னங்க?
          தவறான தகவலைப் பெற்று முதலமைச்சர் தனிப்பிரிவில் தள்ளுபடி செய்த விவரம்  REJECTED. The spare bus was operated on that day and the passengers seated in 3,4 and 5 were shifted to the other seats with their permission. But the lady passenger made a complaint to the Conductor that the seat allotted to her is not satisfactory. Two times herself only shifted the vacant seats. Even the Conductor was personally warned the Cell phone conversation with the father of the lady passenger. REF.No3366/D1/Comml[P&D]/Tnstc/ER/2014 2.07.2014. 
              இந்த நடவடிக்கை அதாவது விசாரணையானது குற்றவாளியை மட்டும் அழைத்து குற்றம் சாட்டப்பட்டவரை மட்டும் விசாரித்து நேர்மையான????.... தீர்ப்பு வழங்கி உள்ளது சரியான தீர்வாகுமா???........ இதற்கு உண்மையான விளக்கத்தைக்கொடுங்க..என்னை நேரில் அழைத்து விசாரியுங்க....தவறு இருந்தால் என்மீது தக்க நடவடிக்கை எடுங்க...
 என சமூக நலன் கருதி அன்பன்

புதன், 27 ஆகஸ்ட், 2014

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
   பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.  

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் 
 அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
 
 நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் 
 ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
 
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்
 
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
 எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
 
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

வெள்ளி, 25 ஜூலை, 2014

discharge certificate என்பது வேறு. discharge summary என்பது வேறு.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

discharge certificate என்பது வேறு. discharge summary என்பது வேறு.
discharge summary :
நீங்கள் மருத்துவமனைக்கு  வரும்போது உங்கள் நிலை என்ன

அதை மருத்துவர் எவ்வாறு கணித்தார்
அதற்கு என்ன வைத்தியம் தேவை என்று தீர்மானித்தார்.
என்னென்ன டெஸ்ட்கள் எடுக்க முடிவெடுத்தார் ஏன்
பிறகு உள் நோயாளியாக வைத்துப் பார்க்கவேண்டுமா? அல்லது
புற நோயாளியாகவே வைத்துப் பார்த்தால் போதுமா? ஏன்
ஏதெனும் நோய்க்குறி நிபுணர்களை கலந்து.
ஆலோசிக்கவேண்டுமா?
உள் நோயாளி ஆயின் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் தங்க வே
ண்டும் ?
எவ்வளவு நாட்களுக்கு இந்த சிகிச்சை தொடரவேண்டும்?
என்பன போன்ற விசயங்கள் அடங்கியது தான் டிஸ்சார்ஜ் சம்மெரி
டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்
இது மேற்கண்ட சிகிச்சைகளை நோயாளிக்கு கொடுத்தேன் .அவர் குணம் அடைந்தார்/ அடையவில்லை . குணம் அடையும் நிலையைத் தாண்டிவிட்டார். ஆகையினால் நாங்கள் டிஸ்சார்ஜ் செய்கிறோம் என்று சொல்வது தான் இந்த சர்டிபிகேட் .
இந்த இரண்டும் இல்லாமல் ஒரு நோயாளி புற /உள் நோயாளி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று விலகக் கூடாது/ அனுப்பக்கூடாது .தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த மாபெரும் வெற்றி: நோயாளிகள் இந்த சட்டப்படி, மற்ற சட்டங்களை போலவே, மருத்துவர்களிடமிருந்து, தங்களது விரிவான சிகிச்சை ரிப்போர்ட் ஐ கேட்கலாம் என்பதே அது. மத்திய தகவல் ஆணையம், மருத்துவமனையின் பொது அதிகார அமைப்புக்கு, நோயாளிகளிகளுக்கும், அவரது உறவினர்களுக்கும் மெடிக்கல் ரெகார்டுகளை அவர்களது privacy மற்றும், ரகசியதன்மையை காக்கவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்ட Articles 21 மற்றும் 19 இன் படி, ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சையின் விரிவான தகவலை பெற உரிமை உண்டு.அதாவது, அவருக்கு என்ன வைத்தியம் செய்யப்பட்டது, அவருக்கு எடுக்கப்பட்ட டெஸ்டுகள்இன் ரிபோர்டுகள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரது முடிவுகள், நோயாளி ஏன் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார், இன்ன பிற. மனுதாரர், பொருட்கள், சேவைகள் மற்றும் அவருக்குண்டான மருத்துவ சேவைகள் அனைத்தையும் குறித்து அவர் கேட்கலாம்.
அகில இந்திய மெடிக்கல் கவுன்சில், கடந்த 11.3.2002 இல், ஒரு சுற்றறிக்கை அனுப்பி, மெடிக்கல் ரெக்கார்டுகளை பராமரிக்கவேண்டும் என்றும், நோயாளிகள் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி உள்ளது.
நோயாளிகளோ, அனுமதிக்கப்பட்ட உதவியாளர்களோ, சட்ட வல்லுனர்களோ கேட்டால், நோயாளிகளது மருத்துவ குறிப்பை மூன்று நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.
கேரளா உயர்நீதிமன்றமும், இதை வலியுறுத்தி உள்ளது. Rajappan Vs. Sree Chitra Tirunal Institute for Medical Science and Technology [ILR2004(2)Kerala150] : Appendix 3 இன் படி, அனைத்து ஆவணங்களோடு, நோயாளி அல்லது சிகிச்சை எடுத்து இறந்தவரின் உறவினர் கேட்டால், அவரது சிகிச்சை குறிப்பேட்டை கொடுக்க வேண்டும்.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 3 இன் படி, நோயாளிக்கு அவரது சிகிச்சை குறிப்பேடு தரப்பட வேண்டும். நோயாளி மருத்துவமனையில் தங்க மறுத்து, சிகிச்சை குறிப்பேட்டை கேட்டால், இந்திய அரசியலமைப்பு சட்டதில் சொல்லப்பட்ட, வாழ்வுரிமை மற்றும் அவரது சுதந்திரத்தின் படி, அவருக்கு உரிமை உண்டு.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு, 8 (1)(h) இன் படி, மருத்துவ ஆதாரங்களை கொடுத்தால், புலன் விசாரணையை பாதிக்கும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் பொதுவாக சொல்வதை ஏற்று கொள்ள முடியாது.
The case citation can be read here: Ms.Nisha Priya Bhatia Vs. Institute of HB&AS, GNCTD, File No.CIC/AD/A/2013/001681­SA dated 23­-07­-2014. நன்றி : RTI INDIA
மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். பயணிகள் பாதுகாப்பு சங்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இதோ
காவல் துறை புகார் தொலைபேசி எண்கள்...!!
1. குற்றம் சார்ந்த புகாருக்கு (Control Room ) ... 100.
2. போக்குவரத்து விதி மீறல்
புகாருக்கு (டிராபிக்) ... 103.

3. குறுஞ்செய்தி (sms ) மூலம்
புகாருக்கு ( சென்னை மாநகர் )... 95000 99100.

4. மருத்தவ சேவை வாகனம் (ambulance ) ... 108.
5. குழந்தைகள் குறித்து உதவிக்கு (Child Line ) ... 1098.
6. பெண்கள் குறித்து உதவிக்கு (Women help Line ) ...
1091.

7. கடலோர பாதுகாப்பு குறித்து உதவிக்கு (Coastal
security help Line ) ... 1093.

8. முதியோர் குறித்து உதவிக்கு (Senior Citizen
Line ) ... 1253.

9. ராக்கிங் கொடுமை புகாருக்கு (Anti-Ragging
Helpline) ... 1800-180-5522 or155222..

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு - பயணி?????

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.பயணிகள் பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.          மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த 01/06/2014 ஆம் தேதி அன்று இரவு 8.40மணிக்கு அனுப்பிய புகார் மீது இன்று (25/07/2014) வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக மனுதாரருக்கு பதில் அனுப்பவில்லை.
              எனவே தகவல் பெறும் உரிமை சட்டம்-32005ன் படி கீழ்கண்ட கோரிக்கைகளை கேட்டு (ஏற்புச்சான்றுடன் கூடிய பதிவுத்தபால்) 
     நேற்று (24.07.2014) பிரச்சினைக்குரிய சென்னை-சத்தியமங்கலம் வழித்தட  பேருந்து  நிர்வகிக்கும்
         ஈரோடு மண்டலத்தின் தலைமையகத்திற்கு,
 திரு.A.A.இராமசாமி-அவர்கள் தலைவர்,பயணிகள் பாதுகாப்பு சங்கம்,(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்ற அரசு பதிவு பெற்ற  தன்னார்வ அமைப்பின் சார்பு சங்கம்) 
        தகவல் பெறும் உரிமை சட்டம்-2005ன் படி 
 தகவல்கோரி விண்ணப்பம் அனுப்பியுள்ளார்..
அதன் விவரம் கீழே தங்களது பார்வைக்கு.........
        


பயணிகளின் பாதுகாப்பற்ற பிரச்சினைகளை தொல்லைகளுக்கு ஆளாக்கப்படும் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் புகார் செய்தாலும் குற்றவாளிக்கு  சாதகமாக திருப்பி? தண்டனையிலிருந்து   தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிகழ்வு! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிலவி வருவது வேதனைக்குரியது...
அனைவரின் கருத்துக்களும்,முரண்களும்,கண்டனங்களும்,ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பயணிகள் பிரச்சினை சம்பந்தமாக கருத்தரங்கம் அல்லது விவாதக்களம் நடத்தினாலும் நாங்களும் பங்கற்று விவாதிக்க தயார்.போக்குவரத்து கழகம் சார்ந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்கள் உட்படசமூக ஆர்வலர்கள் அனைவரும்  பங்கேற்று பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுப்பது யார் என்ற விவரம் வெளிப்படுத்த வேண்டும்.தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.சரியான தீர்ப்பு - மக்களின் தீர்ப்பே! என எதிர்பார்க்கும்,
 இப்படிக்கு,
பயணிகள் நலனில் அக்கறையுள்ள,
 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.
மாநில மையம்,
சத்தியமங்கலம்.
தேதி;25.07.2014 வெள்ளிக்கிழமை.
ஈரோடு மாவட்டம்.